ஒரு பாடலில் பாடுவது எது?
நஸ்ரத் அலிகான்தன் ஒற்றைக் கரத்தால்வானத்தை அளாவிக் கொண்டிருக்கும் படம் வெகு பிரசித்தம்எனக்குத் தெரியும்அந்த வானம்தான் பாடுகிறதுஒருவர் காலியிடமொன்றைஉற்றுப்பார்த்தபடி பாடிக் கொண்டிருக்கிறார்.அங்கு...
View Articleஅரிய உயிரும், எளிய உயிரும்
சாலையின் நடுவே நின்றுஓர் ஆட்டோக்காரர்போக்குவரத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்தூரத்தில் இருந்து பார்க்கையில்ஏதோ விபத்து போல் தெரிந்ததுகிட்ட நெருங்க நெருங்கசாக்கடை உடைசல் என்று சந்தேகித்தேன்பாரத்...
View Articleகவிதையின் ஆசி
ஒரு பூ இயற்கையில் நழுவிஉன் தலைமீது விழுகையில்நிச்சயம் அது ஒரு ஆசிநீ ஒரு தெய்வத்தின் பெயரைச் சொல்!ஒரு பூ இயற்கையில் நழுவிஉன் தலைமீது விழுகையில்நிச்சயம் அது ஒரு ஆசிநீ அந்தப் பூவின் பெயரைச் சொல்!
View Articleபளபளத்தல்
காலை எழுந்ததும்இந்த நாளை நான்காக மடித்துவண்ணப்பெட்டியில் வைத்துஎனக்குப் பரிசாக வழங்கினேன்பிறகுநாள் முழுக்க விரித்து வைத்தேன்இந்தப் பரிசை.
View Articleபண்டிகை
இன்றுபுதுச்சட்டை அணிந்து கொண்டுபோய்ஒரு மலருக்குக் காட்டினேன்எப்போதும் புதுச்சட்டை அணிந்திருக்கும் மலர்என்ன சொன்னது தெரியுமா?
View Articleகாய்ச்சல் பாட்டு
காய்ச்சல் என்பதுகொஞ்சமாக மரணிப்பதுஇல்லாது போவதின் ஆசுவாசம்காய்ச்சல் என்பதுசின்ன ஞானம்போதும் போதும் என்றுபோர்வையைத் தவிரயாவற்றையும் மறுப்பதுகாய்ச்சல் வந்தவுடன்அம்மா வந்துவிடுகிறாள்இப்போதுநீ எங்கு தலை...
View Articleபேரிடரில் ஒரு கிளி
1.தாவாங்கட்டையில்அணிந்திருக்கும் நைந்த மாஸ்க்கோடுஅந்த சின்ன கிராமத்திற்குள் நுழைகிறான் கிளி ஜோசியக்காரன்முதல் தெருவில்ஒரு பிணம் விழுந்துள்ளது"தளபதி சக்திவேல்"காலமாகிவிட்டார்.கெத்தாக வாழ்வதற்குகெத்தான...
View Articleஇன்று நாள் எப்படி?
சிறுபருக்கள் விளையாடும் முகத்தை டம்ளர் தண்ணீரில் கழுவி வாரிப் பின்னாத கலைந்த கேசத்தோடு வாய்க்குள் பிரஷ்சைச் செலுத்தி மேலும் கீழுமாய் வாசித்துக் கொண்டிருந்த ஒருத்தி பார்த்தும் பார்க்காமலும் பார்த்த...
View Articleதெய்வங்கள்
நடக்கவிருந்த பெரும் விபத்திலிருந்து நூலிழையில் உயிர்தப்பிய ஒருவன் காலூன்றி மனம் வீங்கி மயிர்கூசக் கூவுகிறான்... "தெய்வமே...! "நடக்கவே நடக்காதென்று நம்பிக்கொண்டிருந்த ஒன்று திடீரென நடந்துவிட்ட பொழுதில்...
View Articleசிற்றஞ்சிறுகாலை
சின்டெக்ஸ் நிரம்பி வழிகிறதா? என்று காணத்தான் மொட்டைமாடிக்கு ஓடினேன். கண்டேன் யாவும் நிரம்பி வழிய.
View Articleகூற்று
அவள் பணிமுடித்து வீடு திரும்புகையில்கேட்டின் குறுக்கே நின்று கொண்டு பக்கத்துவீட்டுச் சிறுவன் மறியல் செய்கிறான்.ஸ்கூட்டிப் பெண் அவனைக் கொஞ்சிக் கொஞ்சி மிரட்டுகிறாள்அவன் விடமாட்டேன் என்று சத்தம்...
View Articleநான் கர்ணன்
சாரங்கி கேவத் துவங்குகிறது.பால்ய நண்பனோடு பழங்கதைகள் பேசியபடியேடேபிளுக்குக் கீழேஅவன் மனைவியின் தொடை மீதுகைவைத்துள்ள ஒருவன்தானும் சேர்ந்து விம்மத் துவங்குகிறான்கழுத்துச் சங்கிலிக்காக தாயின்...
View Articleகரகரப்பின் மதுரம்
நான் முறைப்படி இசை பயின்றவன் அல்ல. ஆயினும் பாடகன். பெயர் கூட ‘இசை’. எவ்வளவு திமிர்? தமிழ்நாட்டில் எல்லோரும் பாடகர்தான். தன் வாழ்வில் ஒரு பாடலைக்கூட முணுமுணுத்திராத மனிதஉயிர்என்று எதுவும் இருக்காது....
View Articleஉன்னுடையதில்லை அல்லவா?
என்னுடையதா?என்னுடையதா?நெஞ்சு கிடந்து அடித்துக் கொண்டதுஅதே செவலை நிறம்அதே வால் சுழிஎந்தச் சக்கரத்திற்கும்அசைந்து தராமல்சாலையோரம் கிடக்கிறதுதயங்கித் தயங்கி நெருங்கிதலைகுனிந்து நோக்கினேன்.நீண்டதொரு...
View Articleஅநித்தியத்தின் மேடையில் இசை தூவும் அட்சதை க்ஷணங்கள்
உடைந்து எழும் நறுமணம் தொகுப்பு குறித்து ஷங்கர் ராமசுப்ரமணியனின் கட்டுரை.https://www.shankarwritings.com/2022/01/blog-post_9.html?m=1
View Articleஅழகில் கொதிக்கும் அழல்
நாட்படு தேறல்அழகில் கொதிக்கும் அழல்முளைப்பன முறுவல்! அம்முறுவல் வெந்துயர்விளைப்பன! அன்றியும், மெலிந்து நாள்தோறும்இளைப்பன நுண் இடை ! இளைப்ப, மென்முலைதிளைப்பன, முத்தொடு செம்பொன் ஆரமே!கம்பராமாயணத்தின்...
View Articleகாய்ச்சலன்
நான்கு கதவுகளைஎட்டு ஜன்னல்களைமுழுக்க அடைத்துக் கொண்ட பிறகும்வெந்நீருக்கு மாறிகசாயங்களுக்கு மாறிய பிறகும்தைலப் புட்டிகளால்மாத்திரை வில்லைகளால்இரட்டைக் கம்பளியால்நீ உன்னைஇறுகச் சாத்திக்கொண்ட...
View Articleதெரியாதவை
மலைச்சரிவில்தத்தித்தத்தி நடந்துவருகிறதுஒரு ஆட்டுக்குட்டிஅதன் தலைக்கு உச்சியில்கூவிக் கடக்கிறது ஒரு நீலப்பறவைஇரண்டையும் ஒருகணம்சேர்த்துக் கட்டஆங்கொரு திவ்யம்எழுந்து நிறைகிறதுகுட்டி தனியே நடக்கிறதுநீலம்...
View Articleசுழற்பந்து
50 ல் நிற்கும் ஒரு மனிதனுக்குஅதிகாலையில் அவசரமாக ஒரு எலுமிச்சை தேவைப்பட்டுவிட்டதுபக்கத்துக் கடையில் இருப்பு இல்லாததால்அவர் கொஞ்ச தூரம் நடக்க வேண்டி இருந்தது.மனிதன் ஒரு போதும் தனியே நடப்பதில்லை.வாங்கிய...
View Articleபோதும்
தும்மல் போல் அனிச்சை செயலல்ல ஏப்பம்நான் பார்க்கிறேன்,குறிப்பாக முதியவர்கள்அவ்வளவு சுதத்திரமாக"இந்த வாழ்விற்கு எதற்கு இவ்வளவு அழகு?"என்பது போல் ஏவி விடுகிறார்கள் ஒன்றை.
View Article