காய்ச்சல் என்பது கொஞ்சமாக மரணிப்பது இல்லாது போவதின் ஆசுவாசம் காய்ச்சல் என்பது சின்ன ஞானம் போதும் போதும் என்று போர்வையைத் தவிர யாவற்றையும் மறுப்பது காய்ச்சல் வந்தவுடன் அம்மா வந்துவிடுகிறாள் இப்போது நீ எங்கு தலை வைத்தாலும் அது தாய்மடிதான் அனத்துதல் என்பது காய்ச்சல் பாட்டு அது காய்ச்சலைத் தாலாட்டுவது தூரத்திலிருக்கும் இதயத்தை அழைக்க ஆகச்சிறந்த பாட்டொன்று உண்டெனில் அது காய்ச்சல் பாட்டுத்தான். |