அவள் பணிமுடித்து வீடு திரும்புகையில் கேட்டின் குறுக்கே நின்று கொண்டு பக்கத்துவீட்டுச் சிறுவன் மறியல் செய்கிறான். ஸ்கூட்டிப் பெண் அவனைக் கொஞ்சிக் கொஞ்சி மிரட்டுகிறாள் அவன் விடமாட்டேன் என்று சத்தம் போடுகிறான். இவள் விடுவேனா என்று நுழையப் பார்க்கிறாள் இனி இந்த நேரத்தில் அந்தப் பக்கம் போகக்கூடாது. குமரியொருத்தி குழந்தைகளோடு விளையாடுகையில் கொல்லிப்பாவை ஒன்றும் கூடவே விளையாடுகிறது |