Quantcast
Channel: கவிஞர் இசை
Viewing all articles
Browse latest Browse all 792

காய்ச்சலன்

$
0
0

  



நான்கு கதவுகளை

எட்டு ஜன்னல்களை

முழுக்க அடைத்துக் கொண்ட பிறகும்


வெந்நீருக்கு மாறி

கசாயங்களுக்கு மாறிய பிறகும்


தைலப் புட்டிகளால்

மாத்திரை வில்லைகளால்

இரட்டைக் கம்பளியால்

நீ உன்னை

இறுகச் சாத்திக்கொண்ட பிறகும்

உன்னுள் கொதித்துப் பரவுமே 

ஒரு காய்ச்சல்

அதுபோல்  வருவேன்.


காய்ச்சலை அடித்து விரட்டிவிட்டு

அந்தக் காய்ச்சலைப் போல்

உன் மீது வருவேன்.



Viewing all articles
Browse latest Browse all 792

Trending Articles