சிறு தெய்வம்
அசையா களிறெனஅடி திரண்டுமரம் போல் கிளை பரப்பிஇலையெல்லாம் மலராகிகனலெரிக் கதிர் செரித்து இன்னும்இன்னும்கொழுந்து விட்டுவான் நோக்கி ஏகுது பார்மூமுது ஆல் தெய்வம்அவ்வளவு பெரிய தெய்வத்தைசுருக்கி...
View Articleகலவரம்
ஊர் முழுக்கவகை தொகையின்றிகூடிப் பெருகிவிட்ட புத்திசாலிகள் கூட்டத்தில்நானும் ஒருவன்ஒரு முட்டாளின் கதவைஉடைத்துக் கொண்டுஉள்ளே புகுகிறேன்.முட்டாள்தனத்தின் பொக்கிஷத்தைஅவன்எங்கே ஒளித்து வைத்துள்ளான்?அவன் ஒரு...
View Articleசொர்க்கம் என்கிற உவமைக்கு..
சாக்லெட்டை நீட்டும்அந்நியர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.சின்ன சாக்லெட்டை கூட நீட்டாதவன்இந்த பூமிக்கு அந்நியன்அவனிடம் கவனமாக இருக்க வேண்டும்.நைஸாகப் பேசுபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.உம்மனாம்...
View Articleஉணவுத் திருவிழா
டிராக்டர் உழத்துவங்குகிறது.நாரை ஒன்று தரையிறங்கியதுபுழு வேண்டி.இரண்டாகி நான்காகி பத்தாகிநாரைத் திரள் இப்போது.ராட்சத டயர்களை மறந்துமுன்னும் பின்னும் கொஞ்சுவது போல் கொத்திக் கொண்டு திரிகின்றன. ஒரே ஒரு...
View Articleஅருளழகு
தீபச்சுடரை கைகளால் ஒற்றிஅதன்உஷ்ணக் கொழுந்தைகண்களில் படரவிடுகையில்நானெங்கும்நீ நிறைகிறாய்.
View Articleபனிக்கடு பருவம்
குழந்தைக்கு கன்னத்தைக் காட்டுவது போலேவெய்யிலுக்குக் காட்டிக் கொண்டு நிற்கிறாள் ஒருத்தி கிண்ணத்திலிருந்துசந்தனத்தை அள்ளுவது போல்வெய்யிலை அள்ளிமெல்ல மெல்லமெழுகுகிறாள்வதனமெங்கும்ஊர்ந்து ஊர்ந்து...
View Articleஆசையில் படுதல்
நான் பலஹீனமான கவிதைகளை எழுத ஆசைப்படுகிறேன்.அகராதிப் பூச்சிகள்அப்படியேஆழ்ந்து ஊரும் படிக்குஅடுக்குமாடிக் கட்டிடங்களைகட்டி எழுப்புவது போல்ராட்சத இயந்திரங்கள்உறுமிக் கதறாதபடிக்கு உள்ளதிலேயே வலுவான...
View Articleபிரமாதமான விபத்து- சக்திவேல்
அன்புள்ள இசைக்குஎன் பெயர் சக்திவேல். முன்பு உங்களுடைய வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் கவிதை தொகுப்பை வாசித்து கடிதம் எழுதியிருக்கிறேன். ஜெயமோகனின் வாசகர் என அறிமுகப்படுத்தி கொண்டேன் - கடிதத்தில் தான்....
View Articleகருரோஸ்
சித்தி விநாயகர் முன்அமர்ந்திருக்கிறேன்வேண்டுதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றனநீராட்டும் பொருட்டு ஒவ்வொரு அலங்காரமாகஅழித்து வருகிறார்கள்.தலைப்பாகை நீக்கிஆடைகள் களைந்துஎண்ணெய்ச் ஜொலிப்பின் மீது ஒரு...
View Articleடீ டைமில் பிரார்த்திப்பவர்கள்
எனக்காக ஒருத்தி மண்டியிட்டுப் பிரார்த்திப்பதைப் பார்த்தேன்நான் இதை நிறையக் கண்டவன்எனக்குத் தெரியும்நான் கண்மூடி அமர்ந்ததும்தேவன் எழுந்துடீ குடிக்கப் போய் விடுவார் எனபிரார்த்தனையின்ஒரு தருணத்தில்அவள்...
View Articleஅநாதைத்தனத்தின் உறக்க முறை
பேருந்து நிலையங்களில்பூட்டிய கடைகளின் முன்கோவில் வாசல்களில்இப்படிஎங்கேனும் படுத்துதூங்க முயல்கிறார்கள்அநாதைகள்எல்லோரும் இருந்தும்யாரும் இல்லாதிருக்கும்அநாதைகள்பாதுகாப்பான கூரைகளின் கீழ்உறங்க...
View Articleமுதல் ரவுண்டு
லேசாக தோள்பற்றிதனதுவளரிளம் பிள்ளையது வாகனத்தின்பின்னிருக்கையில்முதன்முதலாகஅமர்ந்து போகிறாள் ஓர் அன்னை.அந்த முகத்திற்குச் சொல்லஓர் உவமையில்லை.அவள் ஏறி அமரஇதை விட இன்னொரு இருக்கையுமில்லை.
View Articleசாம்பல் பொன்
மடிந்தும் மடியாதசாம்பல் மாலையில்சீறிப் பாய்ந்து கொண்டிருந்த என் கார்திடீரெனநிதானத்திற்கு வருகிறது.ஊரத் துவங்குகின்றனஅதன் சக்கரங்கள்.என் வெறிநோய்க்கு குறுக்கேபறந்து வருகிறது கொக்குத்...
View Articleகண்ணாடிச் சில்லுகள் பதித்த கோட்டை மதில்
நமது சங்கக்கவித் திரட்டில் பிரிவே அதிகம் பாடப்பட்டுள்ளது. நமது கவிகள் பாலை, பாலை என்று பறந்திருக்கிறார்கள். காதலரைத் தேடி ஊர் ஊராக அலைந்ததன் பொருட்டே வெள்ளிவீதியும், ஆதிமந்தியும் தனித்தன்மையுடன்...
View Articleகொழு நிழலி
உடற்பயிற்சி மைதானத்துக்கு அருகில்வேங்கை மரத்திற்கு அடியில்இன்னொரு வேங்கை மரமெனதிகழ்கிறாள்.அவள் கொழு நிழலின் கீழ்குழுமியிருக்கின்றனர் சிலர்.இளமையைக் கடந்து விட்டவள்வசீகரம் குறைந்தவள்.காமத்தால் எரிக்க...
View Articleகடைவாயில் எஞ்சியிருக்கும் ஒற்றைப் பல் எழுதுவது...
அந்த இளமிருள் பொழுதில்மொத்த மலைக்குமாக நாம் இருவர் மாத்திரமே இருந்தோம்நமது தலைமேல் மரக்கிளையில்தொங்கிக் கொண்டிருந்தது காலம்நாம் வெறுமனேமோட்டர் பைக்கில் சுற்றித் திரிகையில்பெட்ரோல் டேங்கில் குந்திக்...
View Articleபுழுதிவீரன்
எல்லா ஊரிலும்உண்டுஒரு வழிகாட்டிபயணிகள் பலரையும்உரிய வழிகளில் ஆற்றுப்படுத்தியபடிமுன்புஅவனும் ஒரு பயணிதான்புழுதி மறைக்கும்புரவியேறி வந்தவன்எந்த வழி தன் வழியென்றறியாதுகுழம்பித் தவித்துபதறித்...
View Articleநீங்கி நிலைப்பது
விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தாள் சிறுமி.மறுநாள் அடித்த சாரலைக் கண்டு"அதிகன மழை"என்றாள்.மழையென்றால்"அதிகன மழை "என்றுசொல்லித் தந்திருந்தது டிவி பெட்டி.கோடை முழுக்ககுறுக்கும் நெடுக்குமாகஓடித்...
View Articleபியானோவால் எழுதுவது
எழுத்தாளன் ஒரு வரியைத் துவக்குகிறான்அழிக்கிறான்..கொஞ்ச தூரம் சென்றுபழைய நிலைக்குத் திரும்புகிறான்.மீளவும் துவங்கிமீளவும் அழிக்கிறான்ஏதோவொரு தருணத்தில்தளையறுத்துக் கிளம்புகிறான்எழுதிஎழுதிஎழுந்து...
View Article