பேருந்து நிலையங்களில் பூட்டிய கடைகளின் முன் கோவில் வாசல்களில் இப்படி எங்கேனும் படுத்து தூங்க முயல்கிறார்கள் அநாதைகள் எல்லோரும் இருந்தும் யாரும் இல்லாதிருக்கும் அநாதைகள் பாதுகாப்பான கூரைகளின் கீழ் உறங்க முயல்கிறார்கள் அநாதைகளுக்கென்றே உறங்கும் முறை ஒன்றுள்ளது அது ஒரு கையைத் தலைக்கும் இன்னொன்றை தொடை இடுக்கிலும் செருகிக் கொள்வது அப்படிச் செய்கையில் கொஞ்சம் இதம் உருவாகிறது அந்த இதம் இருக்கும் வரை அப்படியொன்றும் அவர்கள் முழு அநாதைகள் இல்லை. |