விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தாள் சிறுமி.
மறுநாள் அடித்த சாரலைக் கண்டு
"அதிகன மழை"என்றாள்.
மழையென்றால்
"அதிகன மழை "என்று
சொல்லித் தந்திருந்தது
டிவி பெட்டி.
கோடை முழுக்க
குறுக்கும் நெடுக்குமாக
ஓடித் திரிந்தாள்
கோடை கழிந்ததும்
வந்துவிட்டது அதிகன மழை
போய்விட்டது அதிகனமழை.