Quantcast
Channel: கவிஞர் இசை
Browsing all 790 articles
Browse latest View live

போல்

உடலில் ஊனமொன்றுமில்லை.பெரிய மூப்பும் இல்லை.எப்போதும்நடுச்சாலையில் குந்தியிருக்கும்.முணுமுணுப்பு போன்றும் குரைத்ததில்லை.சின்ன உறுமல் கூட இல்லை.கார் சக்கரங்கள் ஏற்ற வருகையில்மேலும் கொஞ்சம் உடலைக்...

View Article


லவ் எமோஜி

கோமாளியை ஏமாற்றுவோர்கொடுநரகு புகுவர்அடீ ...நீ தட்டிவிட்டதைதிரும்பப் பெறு!

View Article


நான்

நான் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து டேபிளில் வைத்தேன்.நான் பதறியெழுந்து ஓடத்துவங்கினேன்.நான் துரத்தினேன்.நான்  ஓடினேன்.நான் விடாது துரத்தினேன்.நான் ஒரு மறைவிடத்தில் ஒளிந்து கொண்டு வாயைப் பொத்திக்...

View Article

நில்லாது நிற்பது

அன்று வீசிய காற்றிற்கு என்னடி பெயர்?நம்மைமுன்பின் இருக்கைகளில் இருத்தியது எது?வெறும் பேருந்துதானா அது?பறந்தெழுந்தாடிஎன் கைகளில் படிகிறதுஉன் ஒரு கற்றைக் குழல்.விருட்டென என்னைப் பின்னிழுத்தேன்.அன்னையின்...

View Article

தெரியாது

ரயிலில்தடவித் தடவி நகர்ந்துவரும்அந்தப் பார்வையற்ற முதியவனுக்குசில்லறைச் சத்தத்தைத் தவிரவேறொன்றும் தெரியாது.அவனுக்குத் தூரமாகஜன்னலோரத்திலிருக்கும் ஒருத்திபசியை நிறுத்தி வைத்துவிட்டுஇடக்கையால் துழாவித்...

View Article


வருக !

யோனித் துவாரத்திலிருந்துஇரத்தமும் கூழுமாய்அலறிப் பிதுங்கும் சிசு போலஇத்தனைக்குப் பிறகும்மெல்லத் தலை நீட்டிவரவா என்று கேட்கிறதுஎன் ஆசை.

View Article

நல்லவை

நோயுற்றவனைநந்தவனத்தை நோக்கும்படிபடுக்கவைக்காதிருப்பது நல்லதுபுலரியின் இளங்கதிர்கள்அவன் கண்களில் எரியும்.வீசு தென்றலுக்கும், வீங்கிள வேனிலுக்கும்அவன் தலை வெடித்துவிடும்.சடசடக்கும் மழை நடனம்அவன் ஊனத்தைப்...

View Article

ஞானஒளி

நான் எல்லாவற்றையும் இறுதியில் புரிந்து கொண்டேன்.இறுதியில் என்றால் அந்திமத்தில்அந்திமம் என்றால்மரணப்படுக்கையில் விழுவதற்கு முந்தையநாள் அதிகாலைச் சூரியனிலிருந்து பொன்னொளிர்  வண்ணத்திலான பந்துபோன்ற ஒன்று...

View Article


ஜிம்மிக்கு எசமானர் உரைத்தது

வாயும் குறியும் போதும்நீ மகிழ்வுற்றிருக்கபோதாது என்றுகொஞ்சம் செல்லத்தைக் கோரிச் சிணுங்குகிறாய்.அங்குதான் துவங்குகிறதுஎல்லாக் கலவரங்களும்.

View Article


தேநீர் விருந்து

டேபிளே,எங்கே நான் நொறுங்கிவிடுவேனோ என்கிறஆத்திரத்திலும் வேதனையிலும்தான்உன்னைஓங்கி ஓங்கிக் குத்திவிட்டேன்.கடவுளின் கிருபையால் அப்படி ஒன்றும் ஆகவில்லை.நல்லவேளையாக உனக்கும் ஒன்றும் நேரவில்லை.ஒரு டீ...

View Article

தேடு

ஜிகினா சட்டைபளபளத்து மின்னுவதுதுவராடைபரிசுத்தத்தில் ஆழ்ந்திருப்பதுஇரண்டுமே உனக்கு அழகுதான் தம்பிதேடுஜிகினா இழையோடாததூய  துவரை.            அல்லதுதுவரின் சாந்தம் படியாததூய ஜிகினாவை.

View Article

Image may be NSFW.
Clik here to view.

அலரறிவுறுத்தல்- காமத்துப்பால் உரை

                                        காதலரிடையேயான நெருக்கத்தை ஊரார் பழித்துப் பேசுதல் “அலர் தூற்றுதல்”  எனப்படும். “ அம்பல்” , “அலர்”, “கெளவை” ஆகியவை இதைக் குறிக்கும் சொற்கள். அம்பல் என்பது மெதுவாக...

View Article

சூடான ரத்தமே !

அன்பானவர்களே..இன்றோடு உங்கள் எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிட்டன.இனி நீங்கள்புதிய பாவங்களை  நோக்கிப் புறப்படுங்கள்!

View Article


சக்திக்கூத்து

இத்தனை இன்பங்களுக்கிடையேஎன்னை இறக்கி விட்டுவிட்டுஅதே விமானத்தில் பறந்துவிட்டாள் அன்னை.போகும்முன்என்னை ஆரத்தழுவிமுகமெங்கும் முத்தமிட்டுஅவள் சொன்னதாவது..."எதையும் தொட்டு விடாதே! "

View Article

முட்டிக் கொண்டவர்கள்

18 ஆண்டுகள் கழித்துஎதேச்சையாகமுட்டிக் கொண்டோம்.ஆனந்தப் படபடப்பில்இமைக்காது, நிறுத்தாதுபேசிக் கொண்டேயிருக்கிறாள்அந்தப் பழைய பையனிடம்.கெட்டுப்போன தாடியை சொரிந்தபடிஒரு ஓரமாய் நின்றுகேட்டுக் கொண்டிருக்கிறேன்.

View Article


அந்தோ அப்பாவி !

ஒரே  நாளில் ஒன்பது முறைகூட சொதப்பலாம்.ஆயினும் அன்பே,"இச்"சுக் கொட்டாதேஎவ்வளவு பெரிய பிரம்மாண்டத்தின் முன்எவ்வளவு சின்ன "இச்"சைக் கொட்டுகிறாய் நீமேலும்,நமது "இச்"சுக்கள்சேர்ந்து சேர்ந்தன்றோஊதிப்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நலம் புனைந்துரைத்தல் - காமத்துப்பால்

                                   தலைவியின்  அழகு நலத்தைப் புகழ்ந்துரைக்கும் அதிகாரம் இது    நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்    மென்னீரள் யாம்வீழ் பவள். (1111)அனிச்சமே இதுவரை நீயே மெல்லியவள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தெய்வதம்

         சிவராசண்ணனை லாரி தூக்கி வீசி விட்டது."ப்ரே பண்ணிக்குங்க அங்கிள்..."போனில் அழுகிறாள் அவர் மகள்.அப்போதுதான் உறைத்ததுஎனக்குமண்டியிட ஒரு தெய்வமில்லை என்பது.ஆனாலும்மண்டியிட்டே ஆக வேண்டும்அறுவை...

View Article

தொங்குவன

நின்ற கோலம்அமர்ந்த கோலம்கிடந்த கோலம்எனஎழிற்கோலம்   பல இருக்கநம்மைத் தொங்கும் கோலத்தில் வார்த்தது எவன்?நீரில் வாழ்வனநிலத்தில் வாழ்வன போல்நண்பா...நாம்வாழ்வில் தொங்குவனவா?

View Article

CANCELLATION

டிக்கெட்டை ரத்து செய்து கொண்டிருக்கிறேன்.பார்த்துப் பார்த்து தேர்ந்துதேய்த்தடுக்கிய  துணிகளைசூட்கேஸிலிருந்து வெளியே எடுத்து வைக்கிறேன்.ஜன்னலோரத்துவயல் கொக்குகள் சட்டெனப் பறந்து விட்டன. மூன்று நாட்களின்...

View Article
Browsing all 790 articles
Browse latest View live