இனிப்பு
"சர்க்கரையை விட்டு விட்டேன் "என்று சொன்னான் நண்பன் மெருமிதம் தொனிக்க."முற்றாகவா? "என்று கேட்டேன்."முற்றாகவே"என்று சொன்னான்கீழே குனிந்து சிரித்துக் கொண்டேன்."சர்க்கரையை முற்றாக விட்டுவிடும் நாளில்...
View Articleபெரு வாழ்வு
காலுதைத்துக் கதறும்சிறுவனுக்கு நரைப்பதேயில்லைஅவன் இன்னும் இனிப்புப் பண்டத்தின் முன்தான் நகராது அமர்ந்திருக்கிறான்.எனக்கோ நாடி தளர்ந்து விட்டது.கைத்தடி எதற்கு?அந்தச் சிறுவனை விரட்டி...
View Articleபுணர்ச்சி மகிழ்தல்- காமத்துப்பால்
புணர்ச்சியை எண்ணி மகிழ்தலும் அதன் பெருமை பேசுதலுமான அதிகாரம் இது. கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள .(1101) கண்ணால்...
View Articleஅகத்தகத்தகத்துள்ளே...
நண்பா....உனக்குத் தெரியுமா?நேற்றைய விருந்தில்உன் கோப்பையுள் கொஞ்சம் நஞ்சைக் கொட்டஇந்தக் கைகள்எப்படி துடியாய்த் துடித்ததென்று.வீட்டிற்கு வந்ததும்ஒவ்வொரு விரலாய்கொறித்துத் தின்றேன்.
View Articleலீவூ
இந்த அதிகாலையில்ஓர் ஓட்டு வீட்டின் கூரை மீது எழுந்தருளியுள்ளது ஒரு மயில் எந்தத் தருணத்தும்இடிந்து விழும் கதியிலுள்ள அவ்வீடுசட்டென ஒரு கலைக்கூடமாகிவிட்டதுபவிக்குட்டி...
View Articleசெல்ஃபி
உள்ளத்தைத் திறந்து வைத்தால் கெட்ட நாற்றம் எழுகிறதுஉலகம் மூக்கைப் பிடித்துக் கொள்ளும்படி பிறகு அது முடைநாற்றம் கொள்கிறதுநட்சத்திரங்கள் என் கேட்டில் மங்கிவிடுகின்றன.ஆற்றுமீன்கள் எவ்வளவு ஆழத்தில்...
View Articleநல்லதொரு பெயர் சொல்லுங்கள்
உணவை நீட்டி ஏந்தும் ஓடு அது திருவோடுஎல்லாவற்றையும் ஏந்தத் துடிக்கும்ஓடொன்றுண்டு என்னிடத்தேஎன்னதான் பெயரிடுவேன் அதற்கு? நன்றி : காலச்சுவடு - ஜூன் - 19
View Articleதிருநாள்
உச்சியில் இருந்துஎல்லாவற்றையும் பார்க்கிறது நிலவு.அதன் மனம்தேய்ந்து தேய்ந்து இல்லாமல் ஆகும் திருநாளைபெளர்ணமி என்பர் உலகத்தார். நன்றி : காலச்சுவடு - ஜூன்19
View Articleநலம் புனைந்துரைத்தல் - காமத்துப்பால்
தலைவியின் அழகு நலத்தைப் புகழ்ந்துரைக்கும் அதிகாரம் இது நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள். (1111)அனிச்சமே இதுவரை நீயே மெல்லியவள்...
View Articleதெய்வதம்
சிவராசண்ணனை லாரி தூக்கி வீசி விட்டது."ப்ரே பண்ணிக்குங்க அங்கிள்..."போனில் அழுகிறாள் அவர் மகள்.அப்போதுதான் உறைத்ததுஎனக்குமண்டியிட ஒரு தெய்வமில்லை என்பது.ஆனாலும்மண்டியிட்டே ஆக வேண்டும்அறுவை...
View Articleதொங்குவன
நின்ற கோலம்அமர்ந்த கோலம்கிடந்த கோலம்எனஎழிற்கோலம் பல இருக்கநம்மைத் தொங்கும் கோலத்தில் வார்த்தது எவன்?நீரில் வாழ்வனநிலத்தில் வாழ்வன போல்நண்பா...நாம்வாழ்வில் தொங்குவனவா?
View Articleஅற்புதம்
அம்மி பறக்கும் ஆடியில்காற்றேக்கெதிரேபோய்க் கொண்டிருந்தேன்.காற்றுஎன் ஹெல்மெட்டை அடித்துப் போய் விட்டது.அம்மிஎன் தலையை .
View Articleபூஞ்சோலை
ஒரே மகனைஅவசர சிகிச்சைப்பிரிவுக்குள்அனுப்பி விட்டுதலைமேற் கைகூப்பி"கடவுளே..!"என்றுமருத்துவரின் காலடியில் சரிகிறாள் அன்னை.வெளிரிய முகங்கொண்ட கடவுள்"கடவுளை நன்றாக வேண்டிக் கொள்.."என்கிறது.
View Articleநெறியர்
தினந்தவறாதுஒவ்வொரு அதிகாலையிலும்உளுந்து வடைகளுக்கெதிராய்பெரிய மைதானத்தில்ஐந்து வட்டங்கள் ஓடுபவர்தன் மருத்துவப் பரிசோதனை முடிவைவெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.இருதயவால்வு ஒரு தனி...
View Articleநிதர்ஸனம்
"காலத்தின் மீது கருஞ்சாந்தை அள்ளிப் பூசிக்கொள்ளவா? "எனக் கேட்டு ஒரு செய்தி அனுப்பினேன் சகிக்கு.வந்தபதில் வருமாறு..."அன்பே!திரும்பவும் கருக்க இயலாத படிக்கு நரைத்துவிட்டதுனக்கு.அது உன் வரிகளில் தெரிகிறது...
View Articleகாதற் சிறப்புரைத்தல் - காமத்துப்பால்
காதலர், தம் காதலின் இனிதும், பித்தும் சொல்லும் அதிகாரம்பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயிறு ஊறிய நீர். (1121) மென்மொழி பேசும் தலைவியின் தூவெண்...
View Articleமுதல்கழுகு
ஈயும் எறும்பும் மொய்க்கநாற்றமெழுப்பிக் கிடக்கிறேன்.அதிகாலையில் என்னைக் கண்ட முதல்மனிதன்ஆண்டாண்டு காலமாய் நான் தூக்கிச் சுமந்த பெயரை அழித்துப் போட்டான்.சின்னஞ்சிறு கொலைகளிலிருந்துஎன்னை...
View Articleநாணுத்துறவுரைத்தல் - காமத்துப்பால் உரை
பிரிவுக்காலத்தில் காதல் படுத்தும்பாட்டை காதலர் வெட்கத்தைத் துறந்து விரித்து அரற்றும் அதிகாரமிது. காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி ( 1131) தலைவியின்...
View Articleஒரு புறத்தோர்
இந்த அதிகாலையில்இல்லாத செல்போனில்பேசிக் கொண்டிருக்கிறான் ஒருவன்மறுமுனையில் யாரென்று அவனே அறிவான்.அல்லதுஅவனும் அறியான்."வாங்கிட்டே...வாங்கிட்டே..பீடி வாங்கிட்டேன்..""ஆமாமா...நாம மருதமல போன...
View Articleநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திரன்
என்னை நானாகக் கண்டால்மகிழ்ச்சிரொம்பவும் மிரண்டுவிடுகிறது.பிறகுதான்இப்படிகன்னத்தில் மருவைக்கும் வழக்கத்திற்கு மாறினேன்.
View Article