இரயிலில் இருந்து இறங்கினார்
ஒரு குருடர்.
தண்டவாளங்களைக் குச்சியால்
தட்டித் தட்டி தடுமாறினார்.
கருணை சுரந்து வழிய
எழுந்து ஓடினேன்.
கைபிடித்துக் கடக்கச் செய்தேன் பத்திரமாக.
நன்றியை வாங்கிக் கொண்டு
அவ்வளவுதூர தூரத்திற்கு முன்னே
அவரை
அம்போவென்று விட்டுவிட்டுத் திரும்பினேன்.