மோனைகளின் மயக்கம் ஏதுமில்லை ஒரு எதுகையும் இல்லை அதன் சந்தமாவது நம் நெஞ்சத்து ஏக்கம் அதில் லயம் கொள்வது குருட்டு நம்பிக்கைகளின் இதம் மந்திரம் போல் இல்லாததொரு மந்திரம் அது ஆயினும் மிக உறுதியாக மந்திரம் நம் கைவசம் உள்ள கடைசி மந்திரம் மந்திரங்களுக்கு ஆற்றல் உண்டு மந்திரங்களில் மாயம் உண்டு. நண்பா, உன் ஒரு கையை நெஞ்சில் வைத்துக் கொள்ள வேண்டுமா? வைத்துக் கொள்! அழுகை பீறிட்டு வருகிறதா? அதை அடக்க முனையாதே! நாம் ஒரே குரலில் சேர்ந்து சொல்வோம்... எல்லோரும்... எல்லோரும்... சற்று... சற்று... நிம்மதியாக.... நிம்மதியாக.... வாழும்... வாழும்... காலம் ஒன்று வரும். காலம் ஒன்று வரும். |