குட்டி போட்ட பூனை போல்
டாஸ்மாக்கையே
சுற்றிச் சுற்றி வருகிறான் ஒருவன்.
போலீசார் கடுங்காவல் புரிகின்றனர்.
வெளியே பெரிய பூட்டு தொங்குகிறது.
கொள்ளை அச்சத்தால்
புட்டிகளைக் கூட வேறு இடம் மாற்றி விட்டார்கள்.
ஆயினும்
வீடடங்காது
குட்டிகளையே சுற்றிச்சுற்றி வருகிறது பூனை.
காதலி இல்லாது போயினும்
காதலியின் ஊர் இருக்கிறது அல்லவா?
இது எனக்கு உறைக்க
இவ்வளவு நேரம் ஆகிவிட்டது.