எல்லாவற்றின் மீதும் தூசியெனப்
படிந்து கிடக்கிறது ஒரு சலிப்பு.
நாம் நாயைப் பழக்குவது போல்
நம்மை ஏதோ ஒன்று பழக்கிக் கொண்டிருக்கிறது.
இப்போது
முத்தமிடுவது ஒரு பழக்கம்.
கழுத்தறுப்பது ஒரு பழக்கம்.
சிக்கன் பெப்ப்ர் ப்ரையில்
சிக்கன் பெப்பர் ப்ரையும்,
கத்தரிக்காய்த் தொக்கில்
கத்தரிக்காய்த் தொக்கும் இருக்கின்றன.
கிரிக்கெட் சிக்ஸரோடு தீர்ந்து விடுகிறது.
காட்டுவாசிக்கு காடு உறைந்து விடுகிறது.
வானவில்லால் ஏழு வண்ணங்களைத் தாண்டக் கூடவில்லை.
வேறு வழியே இல்லை
காதலிப்பதைத் தவிர.