கடவுள் உன் முன்னே
பாதி அழுகிய ஆப்பிளொன்றை வைத்துள்ளார்.
ஆப்பிள் என்றால் என்னவென்று
நீ தெரிந்து கொள்ள வேண்டும்
அதன் ருசி உன் நாளங்களில் ஓடி விட வேண்டும்.
அதற்காகத்தான்
அந்த அழுகாத ஏற்பாடு
அப்போதுதான்
அழுகிய பழத்தைக் கடிக்கையில்
உன் அலறல் பெருசாய் எழும்.