மிகப்பெரிய ஆநீதிக்கு ஆளான ஒருவன்
பொக்லைன் இயந்திரத்தை தூக்கி
அக்கிரமக்காரர்கள் மேல் எறிகிறான்
வானத்தை நோக்கி காறி உமிழ்கிறான்
அது போய்க்கொண்டே இருக்கிறது
அவன் புட்டத்துக்கு மேல் ஒரு வால் முளைக்க
அதில் சத்தியம் கொழுந்து விடுகிறது
அக்கிரமக்காரர்கள் சற்றே விலகிக்க கொண்டனர்
கடவுளர்கள் தத்தமது வாகனங்களில்
தரையிறங்கி விட்டனர்
தீயணைப்பு வண்டிகள் பெருகிவிட்ட நாளில்
அவன் ஒரு கேலிக் குரங்காகி விட்டான்
ஆடி முடித்துஅடங்கியவன்
இதழ்கடையோரமாய் ஒரு சிரிசிரித்தான்
மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டவர்கள் தவிர
வேறு யாராலும் சிரிக்கவே முடியாத ஒரு சிரிப்பு...
அந்த சிரிப்புக்குத்தான்
கடுமழையில் நனைந்து நடுநடுங்கும் பூனையைப் போல்
இந்த வாழ்வு
சுவரோரம் ஒண்டுகிறது.