அதிகாலை நீராட்டு முடிந்து
ஈரத்தலை சொட்ட சொட்ட
அவள் அந்த விநாயகரை
வலம்வந்து கொண்டிருந்ததை பார்த்த மாத்திரத்தில்
எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.
பாவீ, இன்னும் உன் உலகில் ஒரு கடவுள் மிச்சமிருக்கிறாரா?
அது இந்த ஆனைமுகன் தானா?
அடீ, நிஜமாலும்தான் துதி சொல்கிறாயா ?
தோப்புக்கரணம் வேறா?
சொல்லடீ, அவன் விழிக்கடைநோக்கு அது தானா?
அல்லது
அதுவாக்கத்தான் இப்படி அலைபாய்கிறாயா ?
இத்தெய்வம் தன் துதிக்கையில் ஏந்தியிருக்கும் கனிந்த பழம்
நீ தானா ?
ல்யூகோடெர்மா – சருமத்தில் தோன்றும் வெண்புள்ளி குறைபாடு
நன்றி ; ஆனந்த விகடன் தீபாவளி சிறப்பிதழ்