$ 0 0 அந்த ஸ்கூட்டிப் பெண்திடீரெனக் குனிந்துமுன்னே நின்றிருக்கும்தன் சின்ன மகனின் கன்னத்தில்முத்தம் வைக்கிறாள்.எதற்கு?என்கிற வினாவைஅதற்குள் அவன் கற்றிருந்தான்.எதுக்கும்மா?எதுக்கும்மா?என்று வழிநெடுகநச்சரித்துக் கொண்டே வருகிறான் சிறுவன்.சிரித்துச் சிரித்துமழுப்புகிறாள்அந்த அன்னை.