காரணமற்று இனிக்கும் கணத்தை காண நேர்ந்தால் அதனை அப்படி உற்றுப் பாராதே! துவக்கி விடாதே ஆராய்ச்சிகள் எதையும் சந்தேகித்துக் கடந்து விடாதே! அதுவே கதியென்று அழுது கொண்டே அமர்ந்துவிடாதே! காரணமற்று இனிக்கும் கணத்தை பேப்பரில் பிடிக்க முயலாதே! அப்போது வந்து விடுகிறது பார் ஒரு காரணம் ஒழுகி விடுகிறது பார் அந்த இனிப்பு காரணமற்று இனிக்கும் கணத்தை காண நேர்கையில் அப்படிப் பதறிப் பதறித் துடிக்காதே! இனிப்பு தானே அது? |