அடுப்படியில் உருட்டப்படும்
காலம் தவிர்த்து
ஏனைய பொழுதுகள் எப்போதும்
ஜன்னலோரத்தில் அமர்ந்திருப்பாள்.
அந்த ஜன்னலுக்கு வெளியே
தூரத்து மலையோ, சுழித்தோடும் நதியோ எதுவும் இல்லை.
தேன்சிட்டோ, வண்ணத்துப்பூச்சியோ
அவசியமில்லை அவளுக்கு.
பேருந்தின் ஜன்னலுக்கு
முண்டியடிப்பாள் இன்னமும்.
விருந்தினர் வீடுகளில்
தயங்கியபடி கேட்பாள்..
"இந்த ஜன்னலைக் கொஞ்சம் திறந்து வைத்துக் கொள்ளலாமா?"
கண்டு கொண்டே இருக்கிறாள்
ஜன்னல்களுக்கு அப்பால்.
அப்படி எங்குதான் போக நினைத்தாய் அன்பே ?
எங்குமே போகவில்லையே ஏன்?
காலம் தவிர்த்து
ஏனைய பொழுதுகள் எப்போதும்
ஜன்னலோரத்தில் அமர்ந்திருப்பாள்.
அந்த ஜன்னலுக்கு வெளியே
தூரத்து மலையோ, சுழித்தோடும் நதியோ எதுவும் இல்லை.
தேன்சிட்டோ, வண்ணத்துப்பூச்சியோ
அவசியமில்லை அவளுக்கு.
பேருந்தின் ஜன்னலுக்கு
முண்டியடிப்பாள் இன்னமும்.
விருந்தினர் வீடுகளில்
தயங்கியபடி கேட்பாள்..
"இந்த ஜன்னலைக் கொஞ்சம் திறந்து வைத்துக் கொள்ளலாமா?"
கண்டு கொண்டே இருக்கிறாள்
ஜன்னல்களுக்கு அப்பால்.
அப்படி எங்குதான் போக நினைத்தாய் அன்பே ?
எங்குமே போகவில்லையே ஏன்?