ஒரு முறை நிறம் ஒட்டவில்லை.
மறுமுறை சுவை கூட வில்லை.
சென்றமுறை மணம் போதவில்லை.
"உங்களுக்கு என்னதான் தெரியும்?
என்கிற கேள்வி ஓங்கியறைந்ததில்
கன்னம் பந்துபோல் வீங்கிவிட்டது.
பழமுதிர்ச்சோலைக்குள்
ஆக்ரோஷமாக நுழைகிறது
ஒரு வேட்டை மிருகம்.
மூடியிருக்கும் சாத்துக்குடியுள்
எத்தனை முறை நீ
எட்டி எட்டிப் பார்த்தாலும்
எதுவுமே தெரியாது தம்பி.